Bhakti Song 476 – உணர்வில் காணலாம்

ஊரெங்கும் தேடினேன் உன்னையே காண

உள்ளத்தில் தேடினேன் அங்கேயும் காண

எங்குமே காணாது என்னுள் தாள்போட

அங்கே கண்டேன் உன்னையே நானே!

 

“இருக்கும் இடம்விட்டு இல்லாத இடம்தேடி

எங்கெங்கோ அலைகிறார் ஞானப்பெண்ணே

அவர் ஏதும் அறியாரடி ஞானப்பெண்ணே”

என்றுயிதை கவி@ சொல்லி வைத்தான் பின்னே

 

உள்ளே இருப்போனை உண்மையில் கண்டாலும்

உணராதிருப்பாரடி ஞானப்பெண்ணே

உணர்வில் கலந்தோனை உள்ளபடி அறியாமல்

உள்ளே கண்டென்ன ஞானப்பெண்ணே

 

உள்ளத்தே வந்து குடியிருப்பான்

உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்திருப்பான்

உணர்வால் அவனை அறியும்மட்டும்

உனக்கெனவே அவனும் காத்திருப்பான்

 

வெண்ணையெய் கையிலே வைத்துக்கொண்டு

ஊரெங்கும் நெய்தேடி அலையாதே

உள்ளே இருக்கும் அவனை விட்டு

ஊரெங்கும் தேடி இனி திரியாதே

 

@கண்ணதாசன்

 

28-7-16, மத்திகிரி, காலை, ௬.00