Bhakti Song 506 – Ethics That Stand Beyond Religion

சமயம் கடந்த சன்மார்க்கம்

“பாவம் செயாதவர் கல்லை எறியட்டும்
பாரிலிருந்து பாவியை நீக்கட்டும்”
இந்த ஒருசொல் போதும் எனக்கு
நியாயந் தீர்க்க வேறொன் றெதற்கு

தத்துவம் ஏதுமே உரைக்க வில்லை
தர்க்கங்கள் ஏதுமே செய்யவும் இல்லை
மனசாட்சியை மெல்லவே தொட்டான்
மாபெரும் நீதியை அவனும் நாட்டினான்

கல்லை எடுத்தோரும் கீழே போட்டனர்
மெளனமாய் அந்த நீதியை ஏற்றனர்
“தண்டிக்க எவரும் இல்லையோ” என்றவன்
தண்டிக்க மறுத்து இரக்கமும் காட்டினான்

இத்தனை எளிய சொற்களைக் கொண்டு
எல்லோர்க்கும் பொதுவான நீதியைத் தந்து
சமயங்கள் கடந்த சன்மார்கம் தந்து
சாற்றினான் உலகிற்கு தன்நீதி கொண்டு

அவரைப் போலவே நானுமே இருந்தேன்
அடுத்தவர் மீது கல்லையும் எறிந்தேன்
அவன்தந்த நீதி என்னையும் மாற்ற
அடிபணிந்து அதனை நானுமே ஏற்றேன்

மத்திகிரி, 5-9-16, இரவு, 8.10

English Translation

“Let those who haven’t committed any sin
Throw the stone and remove the sinner from this earth”
This one word is enough for me
And what else do I require to judge myself

He never uttered any philosophy
And never entered into any kind of argument
Gently He touched their conscience
And established the greatest justice

All those who took the stone dropped it
And silently accepted that verdict
“No one is there to punish you” though He said this,
Yet refuse to punish her by showing mercy on her

By using such few simple words
By giving a common justice to all
And establishing an ethics which transcends all religions
He proclaimed His own justice to this entire world

I too was like them
And I threw stones on others
Once His righteousness changed me
I accepted it by bowing at His feet

Mathigiri, 5-9-16, 8.10 pm.

In judging others our Lord never argued too much. He gently and very simply touched their conscience to allow it to judge them. This kind of approach to help people to realize their sin and compel them to repent is the unique Muktivedic concept. As this incident of not to punish that woman but rather allow her to go condemned by her own conscience touched me very deeply and I accept it silently.