Bhakti Song 509 – Unload It

இறக்கிவை

வந்தேன் என்று உனக்கும் தெரியாதோ
என்னுடன் நீயும் வந்ததை மறந்தாயோ
சுமப்பேன் என்று சொன்னதை மறந்தாயோ
தகுமோ இதுஉனக்கு அதைமட்டும் சொல்லாயோ

அன்னியன், அயலான் அல்லவே நானும்
அவரைப்போல் நானேன் சுமந்திருக்கவேண்டும்
என்பணி முடிந்ததும் நீவரவேண்டும்
இதைக்கூட உனக்கு நான் சொல்லவாவேண்டும்

பிள்ளையின் பசிபற்றித் தாய்க்குத் தெரியாதா
கேட்கும்முன் உணவைச் சமைத்து வைக்காளா
பக்தனின் பாரமும் உனக்குத் தெரியாதா
பலமுறை உன்னைநான் கேட்கத்தான் வேண்டுமா

மற்றவர்போல் என்னை நீ நினைக்காதே
முன்பு செய்ததை நீயும் மறக்காதே
என்பிடிவாதம் உனக்கென்ன புதிதா
எப்படிச் சொன்னாலும் உனக்கும் புரியாதா

அதுஎன்ன உனக்கு என்னிடம் வஞ்சனை
அடுத்தவர் மீது இத்தனை? கரிசனை
உன்சித்தம் ஒருக்காலும் மீறேன் என்பதால்
உன்பாடின் பங்கை மட்டுமே தருவதா

எத்தனை ஏற்றினும் சுமக்கும் கழுதைபோல்
இத்தனை பாடுகள் நீதரச் சுமந்தேன்
இனிமேல் தெம்பில்லை என்றுமே கதறினால்
மேலும் ஒன்றைக் கூடவே ஏற்றுறாய்

ஆயினும் சுமக்கிறேன் உன்சித்தம் என்று
அதைக்கூட நீயும் உணர்கிறாய் நன்று
சேரும் இடம்வரை ஓட்டி வந்தபின்
இறக்கி வைத்திட ஏன்கொண்டாய் தாமதம்

எவ்வளவு காலம் சுமந்துமே நிற்பேன்
என்பாரம் இறக்கிட உன்னையும் கேட்கிறேன்
உடன்வந்த உனக்கு என்நிலை தெரியாதா
வீணாகத் தாமதம் செய்வதும் முறைதானா

மத்திகிரி, 8-9-16 காலை 8.10

English Translation

Don’t you know that I have come unto you?
Did you forget that you too came along with me?
Did you forget what you told that you will carry my burden?
Is it correct on your part (now to delay), just only tell that to me

I am not a stranger or a neighbour to you
Why should I carry like them?
Once my work is completed you should come
Do I need to remind even this to you?

Does not mother know about the hunger of her baby
Won’t she keep the food ready even before her baby asks?
Don’t you know the burden of a bhakta?
Do I need to tell about it to you many times?

Don’t take me for granted
And don’t forgot what you have done to me before
Don’t you know my adamant nature?
Can’t you even understand however I tell about it?

Why you have this kind of indifference towards me
And have more concern for others
As I won’t violate your will
Will you share only your burdens with me?

Like a donkey which carries any kind of burden
I carried all these burdens as you gave them to me
When I cry that I don’t have any more energy
Why you add one more on me?

Yet I carry knowing that it is your will
And it is better you too understand this
Once we reached the destiny
Why you further delay to unload my burden

How long I can carry the burden
I request you to unload my burden
The one who came along with me, does he not know
And it is correct on his part to delay further?

Mathigiri, 8-9-16 8.10 am.

Though I enjoy my bhakti in the Lord and value human life as it is the only means for me to have it, sometimes I ask the Lord “How long do I have to bear the burden of this body and life? When are you going to come and remove this burden?” Like so many I too think that God is only testing me or punishing me where as others are enjoying a relatively joyful life. And often I feel that when I beg to remove certain burden, He adds more to it. But till the end of my life I will continue to ask God, “How long do I have to carry YOUR burden?”