Bhakti Song 528 – Not a Big Thing For You

பெரிதல்ல உனக்கு

இதுஒன்றும் பெரிதல்ல உலகத்தில் உனக்கு
இதுஒன்றும் புதிதல்ல வாழ்க்கையில் எமக்கு
அனுதின வாழ்க்கையில் நடப்பதுதானே
அதைத்தான் உன்னிடம் சொல்ல வந்தேனே

வேதனை என்கிறார் வாழ்க்கையை பலபேர்
வேடிக்கை என்கிறார் என்னைப்போல் சிலபேர்
வேதனை-வேடிக்கை எதுவானால் என்ன
வாடிக்கையானபின் பெயரிலே என்ன

வேதனை வரும்போதும் வேடிக்கை பார்க்கணும்
வேடிக்கையாகவே வாழ்வையும் கழிக்கணும்
வேதனை தன்னைச் சாதனை யாக்கி
வேடிக்கையாக வென்றுமே காட்டணும்

வேதனை-வேடிக்கை எதுவான போதும்
அனுதின வாழ்வை வாழ்ந்துதான் ஆகணும்
அங்குதான் உனது தலையீடு இருக்கணும்
அவரவர்க்கு ஏற்ப அருள்நீ தரணும்

இதுஒன்றும் உனக்குப் பெரிதானதல்ல
இதுகூட உனக்குப் புதிதானதல்ல
வழக்கமாய்க் கேட்கிறோம் என்பதினாலே
தாமதம் செய்வதும் இனிமேலும் சரியல்ல

மத்திகிரி, 21-9-16, மாலை 5.10

English Translation

This is not a big thing for you
and this is not new in our lives
this happens in every day life
and I came to tell only this to you

Many say that life is a trial
but others like me say that it is a thamasha (fun)
whether it is a trial or a fun
once it becomes a routine, what is there in the name

When trials come we should enjoy it
and we should spend the life sportfully
and making the trials as achievements
we should win with a spirit of ease

Whether it is fun or pain
we should live every day life as it is
there alone you should interfere
and bestow your grace as each one deserves

This is not a big thing for you
and this is not a new thing to you
as we ask it regularly
it is not proper on your part to delay further

Mathigiri, 21-9-16, 5.10 pm

As I went for my evening walk I was thinking about the pain and trials in life. However people call it by any name there is no other choice for us but to live with it. As I was thinking about it, I wrote this song and recorded it in my mobile and later wrote it.