Bhakti Song 529 – Not a Burden

பாரமே இல்லை

வேதனை-சோதனை சாபமும் தானோ
அல்லது வாழ்க்கைக்குத் தேவையும் தானோ
சோதனை வேண்டும் வாழ்க்கையை வெல்ல
வேதனை வேண்டும் உன்னிடம் சொல்ல

வேதனை தன்போல் வருவதில்லை
வந்தபின் தன்போல செல்வதும் இல்லை
காரணம் தன்னை ஆராய்ந்து பார்க்க
மேலும் மேலும் இன்னும் பெருகும்

காரணம் எதுவாய் ஆன போதும்
வந்தபின் ஏற்கும் மனதும் வேண்டும்
ஆயிரம் பழியைப் பிறர்மேல் கூறினும்
தன்னையே வெல்ல உன்துணை வேண்டும்

வேதனை இன்றி வாழ்ந்தவர் என்று
மேதினிமீதினில் எவரும் இல்லை
வாழ்வின் ஒரு அங்கமே என்று
ஏற்பது அன்றி வழியும் இல்லை

சோதனை பற்றிச் சொல்லவே வேண்டாம்
சொல்லாமல் எப்போதும் தேடிய வந்திடும்
சோதனை தன்னை வென்றிட மட்டும்
உன்னருள் தேடி வந்திட வேண்டும்

சோதனை-வேதனை சாபமும் அல்ல
அவைநீ தந்த வரங்களும் அல்ல
ஆயினும் அவையின்றி வாழ்வும் இல்லை
இதை உணர்ந்தால் பாரமாய் இல்லை

ஆயினும் அவற்றை நானே சுமக்க
இனி எவ்விதத் தேவையும் இல்லை
“வாருங்கள் இறக்க என்னிடம்” என்று
நீ அழைத்தபின் பாரமே இல்லை

மத்திகிரி, 21-9-16, மாலை 5.45

English Translation

Are trials and suffering a curse
or do we require them in life
we need trails to win in life
and we need suffering to tell to you

Suffering never comes on its own
once it comes, it never goes on its own
but if we began to search for the cuase
it will further increase

Whatever might be the cause for that
we need a heart to accept it
how much we blame others for that
we need you to overcome it

There is none on this earth
who lived without suffering
there is no other option but
to accept it part of life

There is no need to talk about trails
it will come on its own without being invited
but in order to overcome the trails
we need to come to you seeking your grace

trails and sufferings are not a curse
but they are not a blessing from you
but without them there is no life
once we realize this, they never remain burden anymore

But there is no need for us
to carry them on our own
Once you invited us to come unto you
they never remain burden anymore

Mathirigi, 21-9-16, 5.45 pm

As I went for my evening I was thinking about the reality of life which has more suffering and trails than joy and pleasure. But my bhakti in the Lord refuses to accept that it is from God. At the same time the reality of suffering and trial often questions God about the purpose of them in life. As I contemplated about it I wrote this song.