Bhakti Song 535 – எதிர்மரை எண்ணம்

எதிர்மரை எண்ணங்கள்

என்னுள்ளே ஏராளம்

இதனையும் வெல்லத்தான்

நீயுமே உதவனும்

 

குறைகளைத் தொகுத்து

குணம்காண மறுத்து

அதன்படி தீர்மானம்

செய்வதை மாற்றனும்

 

எண்ணினால் எத்தனை

என்னுள்ளே இருக்கு

அதனை ஏற்கயென்

மனமும் மறுக்குது

 

இந்த குணம்மாற

எனக்குநீ உதவனும்

நல்லதை காண்கிற

மனதையும் தரனும்

 

குறைகளைக் காண்பதால்

குறுகியே போகிறேன்

குணம்காண மறுத்தால்

வீணாக ஒடுங்குறேன்

 

என்னைப் போலவே

நீகாண முனைந்தால்

என்னாகும் என்நிலை

என்பதை மறந்தேன்

 

நல்லது ஒன்றும்

காணாத போதும்

எத்தனை இரக்கம்

காட்டினாய் எனக்கும்

 

அதுபோல நானும்

இரங்காத போதும்

எதிர்மரை எண்ணத்தை

நீக்கினால் போதும்

 

மத்திகிரி, 27-9-16, காலை 5.15