Bhakti Song 536 – அன்பாலே மட்டும்

அறிவாலே உலகையும் ஆளவே முடியாது

அதிகாரம் காட்டியே வெல்லவே இயலாது

பிடிவாதம் செய்வதால் பயனேதும் கிடையாது

அன்பின்றி இவற்றுக்கு மாற்றமும் கிடையாது

 

உள்ளான அன்பிற்கு உருவேதும் கிடையாது

ஆயினும் உடலின்றி அதுகூட புரியாது

உலக்குக்கும் அதையுமே உணர்த்தவே எண்ணி

உன்மேனி மூலமே காட்டினாய் அன்று

 

குருடனை தொட்டு குணமுமே ஆக்கினாய்

குட்ட ரோகிக்கு இரக்கமும் காட்டினாய்

உன்னாடைதன்னை தீண்டவும் செய்து

உதிரப் போக்கை நிறுத்தியும் காட்டினாய்

 

ஒருவார்த்தையால உலகையே படைத்தாலும்

ஒவ்வொரு பாவியை தேடியே மீட்டாய்

காணாமல் போன ஒருஆட்டை மீட்டு

கவனமாய் மீட்டு தோள்மீது வைத்தாய்

 

உன்னைப் போலவே நாங்களும் வாழ

ஒவ்வொரு மனிததை தேடியே மீட்கனும்

அதிகம் சாதிக்க ஆத்திரம் கொள்ளாமல்

அன்பற்ற அறிவுக்கு முடிவும் கட்டனும்

 

தன்னிலும் பிறரை உயர்வாக எண்ணி

தனிப்பட்ட மனிதர்க்கு அன்பையும் காட்டனும்

தன்னைப் போலவே பிறரையும் எண்ணும்

உள்ளம் ஒன்றையே உன்னிடம் வேண்டனும்

 

மத்திகிரி,28-9-16, மதியம் 2.10