Bhakti Song 538 – அவன் மேனி

காலும் கையுமாய் மாறாச் சொன்னான்

கடவுளை உலகுக்குக் காட்டச் சொன்னான்

உன்னையும் என்னையும் சேரச் சொன்னான்

ஒருமித்து அதனையும் செய்யச் சொன்னான்

 

நல்ல வேளை அவன் இங்கே இல்லை

நம்மிடை உருவமாய் வாழ வில்லை

அவன் உருவாய் நம்மை மாற்றிவைத்தான்

அதன் மூலம் உலக்குக்குக் காட்சிதந்தான்

 

இந்தப் பேரினை நாமும் பெற்றிடவே

எந்தத் தவமுமே செய்ய வேண்டாம்

அவனது மேனியில் ஒரு அங்கமாக

அனுதினம் வாழ்வது ஒன்று போதும்

 

நம்குறைகள நாமும் எண்ண வேண்டாம்

நம்மால் ஆகாது என சொல்லவேண்டாம்

நம்பங்கை நாமுமே நாளும் செய்ய

அவன் பங்காய் அதனையும் மாற்றிடுவான்

 

எவரெல்லாம் இந்த பேறு பெற்றார்

என்பதை நாமுமே எண்ணிப் பார்த்தால்

“நானல்ல அவன் என்னில் வாழ்கிறான்”

என்றுமே சொல்கின்ற தொண்டர்களே

 

மத்திகிரி, 30-9-16, மதியம் 2.10