Bhakti Song 795

இந்த வரம் கேட்டேன்

வேறேதும் செய்ய அறியேனே நானும்
விரைந்தே பணிந்திட வந்தேனேநாளும்
கோவே எந்நிலை அறிவாயே நீயும்
கூறிட வேறென்ன உனக்குமே நானும்

உன்னாலே நானிந்த வாழ்வையும் பெற்றேன்
உனக்கென தருவதை மட்டுமே அறிவேன்
அதை எண்ணி அனுதினம் மகிழ்ந்தேன்
அதனால் திருவடி பணிந்திட வந்தேன்

முறையிடும்படி நீ குறையேதும் வைக்கலை
முனிந்திடும்படி ஒருபோதும் நடக்கலை
தகுதியைப் பார்த்து நீயும் தரவில்லை
தனித்து தவித்திடும் நிலையை வைக்கலை

உணர்ந்தே திருவடி வந்தேன் சிலமுறை
உணர்வின்றி நின்றேன் நானும் பலமுறை
உள்ளதின் ஓட்டதை உணர்ந்திட்ட நீயும்
உணர்வையும் மீறி கலந்தாய் மீண்டும்

இதனினும் வேறு பேறும் வேண்டேன்
இந்த வரமொன்றே அனுதினம் கேட்டேன்
இதுபோல் வாழ்ந்து ஓட்டத்தை முடிப்பேன்
என்றும் உன்னுடன் வாழ்ந்தும் இருப்பேன்

மத்திகிரி, 8-1-18, இரவு 10.30