Bhakti Song 796

வரம் கொடு

கொடுத்ததை நீயே
எடுத்துமே கொண்டாய்
கொஞ்சமும் எனக்கில்லை
வருத்தமும் இதிலே

இதுவரைத் தந்ததை
எண்ணி எண்ணியே
என்னுளம் சொல்லுது
நன்றிகள் கோடியே

நான்கேட்டு நீயுமே
தரவில்லை என்பதால்
மீண்டும்நீ மறுத்திட
நட்டமோ எனக்கில்லை

ஒருவிதம் இதுவுமே
நல்லதாய்ப் போனது
ஓயாத எண்ணமும்
தன்போல நின்றது

ஆயினும் உள்ளத்தில்
சிறுஆசை உள்ளது
அதமட்டும் இப்போது
சொல்வதும் நல்லது

என்னதான் உன்னைநான்
வழிபட்ட போதிலும்
இதன்முன் அவைஎலாம்
வெறுமையாய்த் தோணுது

அன்றாடம் ஒருபாட்டு
எழுதினால் மட்டுமே
அடியவன் மனதிலே
நிறைவுமே பெருகுது

இதையெண்ணி மீண்டுமே
எடுத்ததைத் தந்திடு
இன்னும் சிலபாடல்
எழுதிட வரம்கொடு

மத்திகிரி, 8-1-18, இரவு 11.45