Bhakti Song 799

வருந்தக் கூடாது

ஒருமுறை எனக்குன்
தரிசனம் தாராயோ
உன்னையே காண்கிற
வாய்ப்பினை அருளாயோ

ஊனக் கண்களால்
உன்னையும் காண்பேனோ
ஒருமுறை உன்னையும்
தொட்டுமே பார்ப்பேனோ

உண்காட்சி கண்டதாய்
பலபக்தர் சொன்னார்
நீபேசி அவர்கேட்ட
அனுபவம் சொன்னார்

இதுவரை இவைஎலாம்
நான்கண்ட தில்லை
என்னவோ எனக்கு
அதில்நாட்டம் இல்லை

சிந்தையில் உண்காட்சி
பலமுறை கண்டேன்
உன்வேதம் பேசிட
அனுதினம் கேட்டேன்

அறிவாலே தேடி
உன்னையே அடைந்தேன்
அதன்மூலம் பக்தியில்
அனுதினம் வளர்ந்தேன்

ஆயினும் எனக்குள்ளே
ஒருகேள்வி உண்டு
அதற்கான பதிலும்
உன்னிடம் உண்டு

பிறர்பெர்ற அனுபவம்
எனக்கேன்நீ மறுத்தாய்
பேசாமல் மவுனமும்
நீயேன் காத்தாய்

பக்குவம் எனக்கில்லை
என எண்ணினாயோ
பாவத்தின் கறைகளை
போக்கலை என்றாயோ

பக்தியின் பணிவு
எனக்கில்லை என்றாயோ
பாவிதான் என்றே
புறக்கணித் தாயோ

இவற்றுக்கு பதிலை
நான்கேட்கும் போது
வீணாக சிரித்து
மழுப்பக் கூடாது

அதனாலே எனக்கு
கோபம் வரும்போது
அதற்காக நீயும்
வருந்தக் கூடாது

இதைக்கேட்டும் இன்னும்
ஏன் சிரிக்கின்றாய்
ஏன்இந்த நாடகம்
வீணே நடிக்கின்றாய்

இவற்றின் தேவை
எனக்கில்லை என்றோ
எனக்குள்ளே நீவாழ்ந்து
அருள்காட்சி தருகின்றாய்

மத்திகிரி, 9-1-18, இரவு 11.10