Bhakti Song 82 – Wait Till I Come

வரும் வரை பொறுத்திரு

உன்னை உணர்வது என்பது

ஒருநாளும் இயலாத காரியம்

உள்ளொளி பெருக்கி நீயுமே

வரவேண்டும் என்னிடம் நாளுமே

சஞ்சலமான என் மனமே!

சற்றேனும் நிற்கமாட்டாயோ?

என்னிடம் வருகின்ற இறைவனிடம்

ஓர்வார்த்தை பேச விடமாட்டாயோ?

ஆயிரம் காரியம் உண்டெனக்கு

அறிவேனே அதனையும் நானும் நன்கு

அவையாவும் சிறப்பாகச் செய்திடவே

அவன் அருள் வேண்டும் நாள்தோறும்

வலியத் தேடி  வருகின்ற

தெய்வத்தைக் காண ஒருமுறை

எத்தனிக்கும் போதினிலே

கூத்தடிக்கின்றாய் ஆனாலும் நீ

ஆ! என்செய்வேன் இறைவனே?

அருகில் வந்தபின் உன்னையே!

தடவியாகிலும்  காணவே

தவிக்கின்ற என்நிலை காணாயோ!

எட்டி நின்றபடி வேடிக்கை

பார்பதென்பதே உன் வாடிக்கை

அருளோடு நீகாட்டும் புன்னகை

அதுவே என்வாழ்வில் நம்பிக்கை

இவ்வளவு தூரம் வந்தபின்னே

இன்னும் சிலகணம் பொறுத்திடு

எனக்குள்ள வேலை முடித்தபின்னே

வருவேன் அதுவரை பொறுத்திடு!

18-01-1996. லக்னோ

English Translation

Understanding you
Is impossible ever in life
You should come to me
By giving inner light within me
Oh unstable mind
Can you not stand still (for a moment)
Won’t you allow me to talk?
To my Lord who comes unto me?
Thousands of things you have
And I know that well
But even to accomplish them correctly
His grace is needed every day
When I try to see my Lord at least one time
Who comes unto me voluntarily
You give too much unnecessary trouble
Oh Lord what else can I do?
After you come near to me
Can you not see my longing
to realize your presence by throwing my hand around you (like a blind person)
But standing at a distance
Seeing this thamasha is your regular event
The gentle smile accomplished with grace from you
Is the only hope in my life
After you came this for
Wait for some more time
After accomplishing my work I will come unto you
Wait for me till that time.

18-01-1996. Lucknow

 

Comments

Several times in my life I have been too busy with all other works, except to spend time with the Lord. I will decide to be with the Lord after accomplishing the work on my hand, but another will come.  Such incidents repeated several times in my life and still continue.  In one situation I wrote this song, as I felt that the Lord with a smile on His lips standing in a distance is watching all my busyness. So while rebuking and begging my heart not to become too busy at the same time pleading with the Lord to wait some more time till I finish the work at hand, I wrote this song. I know many of us have similar experiences.