Bhakti Gita Chapter 8

எட்டாம் அதிகாரம்

 

ராஜயோகம் என்ற இறையரசு

 

(இறைவன் முக்தேசன் கூறினான்:)

 

 1. விண்ணுலகம் போல் இந்த

மண்ணுலகும் மாறட்டும்!

 

 1. இவ்வுலகம் முழுமைபெறும்

என்னாட்சி வந்ததினால்.

 

 1. மானிடரே பாருங்கள்

மனம் திரும்பி வாருங்கள்

 

 1. என்செய்தி கேளுங்கள்

எல்லாம் நிறைவாகியது.

 

 1. ’உன்னாட்சி மட்டும் இந்த

உலகிடை வந்திடவேண்டும்’

 

 1. என்று மட்டும் இனிமேலும்

இறைவனிடம் வேண்டுங்கள்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. இறையரசின் தன்மை எப்படியிருக்கும்

எவ்வாறு உலகில் அவனாட்சி வந்திடும்?

 

 1. என்றே சீடரும் ஐயனைக் கேட்க

ஆண்டவன் உரைத்தான் அவர்க்கு விடையாய்:

 

 1. ’அற்புத, அடையாளம் ஆரவாரமுடன்

இறையாட்சி வாராது என்பதை உணருங்கள்.

 

 1. உள்ளான மனதினிலே, உங்கள் நடுவிலே

உணர்வுடன் ஒன்றாகி நானாட்சி செய்வேன்.

 

 1. நிலத்தை உழுது நன்றாக நீர்ப்பாய்ச்சி

விதைப்பது போலவே என்னாட்சி மலரும்

 

 1. ஊன்றிய விதையும் செடி, பயிராகி

ஏற்ற சமயத்தில் பலன் தருவதைப் போல்

 

 1. என்னாட்சி வந்திடும் ஆரவாரமில்லாமல்

உணர்வாய் அதனை நீயும் அப்போது’.

 

 1. ஆனாலும் அதனை உணராத சீடரும்

மீண்டும் கேட்டனர் மந்த புத்தியால்:

 

 1. ’உன்னாட்சி வரும்போது எங்களில் உயர்ந்தோர்

யார் என உரைத்தால் குழப்பமும் நீங்கும்’.

 

 1. அவர் மீது பரிவுற்ற ஐயனும் உடன் ஒரு

குழந்தையின் கைப்பிடித்துக் கூறத்தொடங்கினான்:

 

 1. ’மாய்மாலம் நீக்கி மனதில் குழந்தை போல்

எளிமை கொண்டோரே என்னாட்சி அறிவார்.

 

 1. வெள்ளை மனம் கொண்ட, பிள்ளை குணம் கொண்டால்

இறைவன் ’தன்’ ஆட்சி உங்களிடம் வந்திடும்.

 

 1. தன்னைத்தான் தாழ்த்தி, தாழ்மையுடன் வாழ்ந்து

உள்ளத்தில் உயர்ந்தோனே உள்ளபடி உயர்ந்தவன்.

 

 1. எளிமையுள்ளவனே புண்ணியம் செய்தவன்

இறையரசு என்றும் அவனுக்கே சொந்தம்.

 

 1. உணவு, உடை, எண்ணி உள்ளமும் கலங்காமல்

இறைவனை நாட எல்லாம் அருள்வான்’.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. உணவும், உடுப்பும் உறைவிடம் மட்டும்

இறைவனின் ஆட்சிக்குச் சாட்சி யல்ல.

 

 1. ஆனந்தம், அமைதி, இறைவனின் நீதி,

அமைந்த இடமே அவனின் ஆட்சி.

 

 1. தீயவன், முரடன், பேராசைக்காரன்,

துன்மார்க்கன் அங்கு நுழைவதே இல்லை.

 

(ஆண்டவன் கூறினான்:)

 

 1. புதையலைத்தேடிய மனிதனைப் போல

இறையாட்சி நாடும் மாந்தரும் இருப்பர்.

 

 1. மதிப்பற்ற மாணிக்கம் கைக்கொள்ள எண்ணுவோர்

அனைத்தையும் விற்று அதைமட்டும் கொள்வர்.

 

 1. இறைவனின் ஆட்சியில் நுழைவது என்பது

எத்தனை கடினம் இதை யார் உணர்ந்தார்?

 

 1. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும்

காசாசையுள்ளோர் காணார் என் ஆட்சி.

 

 1. பணிவு உள்ளவனே பாக்கியமுடையோன்

அவனே பெறுவான் உலகைத் தன்பங்காய்.

 

 1. அதிகாரம் செலுத்தி ஆண்டிட விழைவோர்

தன்னிச்சை நிறைவேற ஆளுகை செய்வார்.

 

 1. என் அடியார் என்றும் இதற்கு மாறாகப்

பணிவுடன் வாழ விழைந்திட வேண்டும்.

 

 1. முதன்மையாய் இருக்க விரும்பினால் என்றும்

இறுதியாய் நின்று எல்லோர்க்கும் பணிசெய்

 

 1. உங்களில் தாழ்மை உள்ளவன் எவனோ

எல்லோர்க்கும் தலைவனாய் முன்நின்றுசெல்வான்.

 

 1. அரசன் நானென அனைவரும் உரைத்தாலும்

இவ்வுல காட்சி என்னாட்சி அல்ல.

 

 1. பணிசெய்ய வந்தேன் பணிகொள்ள அல்ல

இப்படி வாழ்ந்த என்னைப் போல் நீங்களும்

 

 1. உங்களில் உயர்ந்தவன் என்றே எண்ணுவோன்

எல்லோர்க்கும் பணிந்து சேவகம் செய்க.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. பாடுபட்டுப் பலியாகும் முன்பாக

சீடரை அழைத்தான் விருந்தாக.

 

 1. பரிமாறும் முன்னே பணிவாக அவனும்

அரைகட்டி எழுந்தான் முன்பாக.

 

 1. நீர்கொண்டு அவர்தம் கால்கழுவி

துணிகொண்டு அதையும் தூய்மை செய்தான்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. ஈசனாய் குருவாய் இருந்த என்போல

பாதம் கழுவிச் சேவை செய்க.

 

 1. உயர்ந்தவன் என்பவன் தாழ்ந்தவனாகி

தலைவனாய் இருப்பவன் சேவை செய்க.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. பணிவுஎன்னும் சால்வைஅணிவோம்

ஒருவருக் கொருவர் தாழ்மை சொல்வோம்.

 

 1. தன்னைக் காட்டிலும் மற்றவர் மேலோர்

என்று அவரைப் போற்றி வாழ்வோம்.

 

(ஆண்டவன் கூறினான்:)

 

 1. இறைவன் நாமத்தை வீணில் உரைத்தோர்

என்றும் அடையார் பரமபதத்தை.

 

 1. இறைவன் சித்தம் எதுவென உணர்ந்து

அதன்படி வாழ்வோர் அடைவார் அவனடி.

 

 1. இறைவன் அளித்தான் எனக்கோர் ஆட்சி

அதுபோல் அளிப்பேன் உமக்கு மாட்சி.

 

 1. நீதியின் நிமித்தம் துன்பமே அடைந்தோர்

அடைவர் நிச்சயம் இறைவனின் ஆட்சி.

 

 1. உங்கள் பகைவனை நேசித்து வாழ்த்துங்கள்

துன்பம் தந்தோர்க்கு வேண்டுதல் செய்யுங்கள்

 

 1. இன்னா செய்தாருக்கு நன்மைசெய்யுங்கள்

சாபம் தருவோர்க்கு நல்லாசி கூறுங்கள்.

 

 1. நிந்தனை செய்வோர்க்காய் வேண்டுதல் செய்யுங்கள்

இப்படிச்செய்தால் இறை மைந்தராவீர்.

 

 1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து

நல்லோர், தீயோர் எனப் பேதமும் பாராமல்

 

 1. சூரியன் உதிக்கவும் மழைநீர் அளிக்கவும்

அருள்காட்டும் இறைவன்போல் நீங்களும் மாறுங்கள்.

 

 1. தீயவரோடு போட்டி போடாது

இறைவனைப்போலவே இரக்கமும் காட்டுங்கள்.

 

 1. ஒரு கன்னத்தில் அறைந்தால் உவப்புடனே

மறு கன்னத்தையும் மகிழ்வுடன் காட்டுங்கள்.

 

 1. மேலாடை பிடுங்கப் போராடு வோருக்கு

அங்கியை அளித்து ஆசியும் கூறுங்கள்.

 

 1. ’ஈ’ என இரப்போர்க்கு ’இல்லை’ எனாது

இயன்ற உதவி உவந்தே தாருங்கள்.

 

 1. கைகட்டி நின்று கடன்கேட்போருக்குக்

கைவிரிக்காது கேட்டதைத் தாருங்கள்.

 

 1. மகிழ்ச்சி கொள்வோருடன் ஆனந்தப் படுங்கள்

துயரம் கொள்வோர்க்கு ஆறுதல் கூறுங்கள்.

 

 1. உங்களுக்கு மற்றவர்கள் செய்ய விரும்புவதை

மனமுவந்தே நீங்கள் அவருக்குச் செய்யுங்கள்

 

 1. நியாயம் தீர்த்தபடி நியாயம் தீர்க்கப்படும்

குற்றம் சாட்டியவர் குற்றவாளி ஆகிடுவார்

 

 1. மன்னிப்பு அளியுங்கள், மன்னிக்கப்படுவீர்

மனந்திருந்துவோரை முகம்மாறி வெறுக்காதீர்.

 

 1. உள்ளான மனதோடு மன்னிப்பு அருளாதோர்

இறைவனின் மன்னிப்பை என்றும் பெறமாட்டார்.

 

 

 1. ஆயும் எடுப்பவன் அதனால் சாவான்

சமாதானம் செய்வோர் புண்ணியவான்கள்.

 

 

(சீடர்கள் கூறினார்கள்:)

 

 1. பாடுபல நாம் அடைந்தே

பரமபதமும் போகவேண்டும்

 

 1. அப் பதத்தை அடைவதற்கு

ஆயத்தமாய் இருந்திடுவோம்.

 

 1. பாடுபட்டு நாம் பக்குவம் அடைந்திடவே

துன்பம் தருவோரைச் சபித்திடாமல்

 

 1. இதயம் நிறைந்து வாழ்த்திடுவோம்

இனிய வார்த்தை கூறிடுவோம்.

 

 1. நிந்தை ஒன்றுமே பேசிடாது,

சண்டை வீணிலே போட்டிடாது,

 

 1. ஒற்றுமை பேணி நம்மிடையே

நன்மதிப்புடனே வாழ்ந்திடுவோம்.

 

 1. இறைவா உந்தன் பெருமைமட்டும்

ஓங்கி விண்ணில் வளர்ந்திடட்டும்.

 

 1. மண்ணுலகில் மாந்தரிடை

அமைதி என்றும் நிலவட்டும்.

 

[இறையரசு என்னும் இராஜ யோகம் என்ற

எட்டாம் அதிகாரம் இத்துடன் நிற]இவுற்றது.