Category Archives: Bhakti Songs

Bhakti Song 561 – வீண்சிந்தை போக்குவோம்

நல்லவிதமாக நேரத்தைப் போக்கிட

நமக்கும் உள்ளது நல்லவழி பல

தேவை இல்லாத சிந்தையை போக்கி

தேடலாம் இறைவனை அவனருள் நாடி

 

வேண்டாத பலவாதம் நாள்தோறும் இருக்க

அத்துடன் பிடிவாதம் சேர்ந்து கொள்ள

ஆயிரம் தர்க்கங்கள் அவற்றுடன் செய்ய

அமைதியை இழப்போமே மனதினுள் மெள்ள Continue reading

Bhakti Song 573 – இயக்குனர் சரியில்லை

போதும் போதும் என்னை விட்டுவிடு

போராடி இளைத்தேனே ஆளைவிடு

நான்தான் கிடைத்தேனா ஆட்டிப்பார்க்க

நன்மை-தீமையை உரசிப் பார்க்க

 

இதற்காக பலபேர்கள் காத்திருக்க

எதற்காக வம்புக்கு இழுக்கிறாய்நீ

முடமாகி மூலையில் உட்கார்ந்தபின்

கோல் ஊன்றி நிற்க சொல்வதுமேன்

Continue reading

Bhakti Song 572 – கரைசேர்ந்தேன்

கையேந்தி வந்து கேட்க உன்னிடம்

கூசியே நிற்பார் தகுதி யற்றோர்

எல்லாம் இழந்து ஏழையாய் ஆயினும்

ஏனோ உன்னிடம் வந்திட மறுப்பார்

நீரில் அடித்து செல்வோரும் கூட

உடைந்த கிளையைப் பற்றிக்கொள்வார்

வேர்கொண்ட மரத்தின் வேரும் கிடைத்தால்

நிச்சயம் பிடித்து கரையும் சேர்வார்

Continue reading

Bhakti Song 571 – ஜீவ ஊற்று வேண்டும்

உப்புக் கடலாக மாறிவிடாமல்

உன்னூற்று நிதமும் பாயவேண்டும்

உவர்நிலமாய் போய்விடாமல்

உரமிட்டு என்னைநீ மாற்றவேண்டும்

 

ஜீவனின் ஊற்றால் நீர்நிதம் பாய

கேணியில் நீரும் நிறைந்திருக்கும்

ஊற்றும் பெறுக்கற்ற கேணியும்கூட

உலர்ந்து வரண்டு காய்ந்துவிடும்

Continue reading

Bhakti Song 570 – என்ன புண்ணியம் செய்தேன்

வந்தேன் வள்ளளே வரம் வேண்டி

வந்தேன் மீண்டும் கரம் ஏந்தி

உன்னடி அன்றி தஞ்சமில்லை

அருளுக்கு உன்னிடம் பஞ்சமில்லை

 

துதித்து உன்னைப் பாடிடுவேன்

தூயவன் உன்னையே போற்றிடுவேன்

தருணம் இதுவெனக் கூறிடுவேன்

தஞ்சம் அருளிடக் கெஞ்சிடுவேன்

Continue reading

Bhakti Song 569 – உறவின் மேன்மை

நம்போல் பிறரையும் இறைவனே படைக்க

நாம்மட்டும் எவ்விதம் தனிப்பட்டு இருக்க

ஊருடன் உறவுகள் அவன் தந்திருக்க

ஒதுங்கி எப்படி நாம்மட்டும் வாழ்ந்திருக்க

 

உறவன்றி உலகத்தில் ஒன்றுமே இல்லை

உறவின்றி எவையுமே வாழ்வதும் இல்லை

ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றுப் போனால்

ஒருபோதும் அவற்றாலே பயனேதும் இல்லை Continue reading

Bhakti Song 568 – இழக்கக் கூடாதது

உன்மீது அன்பு இல்லாமல் வாழ்வது

ஒருகாலும் எனக்கு இயலாத ஒன்று

உயிரற்ற உடல்கொண்டு நடமாடமுயல்வது

இயலாத ஒன்று எவர்க்குமே இங்கு

 

நீரின்றி மீனுக்கு வாழ்விடம் இல்லை

நீயன்றி பக்திக்கு இலக்குமே இல்லை

சந்திரன் ஒளியன்றி தாமரை மலராது

உன்னருள் ஒளியன்றி எமக்கு வழியேது Continue reading

Bhakti Song 567 – மீண்டும் மீட்டுக்கொண்டாய்

இதுவரை உணராமல் இருந்து விட்டேன்

இப்போது உன்குணம் உணர்ந்துவிட்டேன்

எளியவன் என உன்னை எண்ணிவிட்டேன்

உன்னன்பை ஏளனம் செய்துவிட்டேன்

 

கண்மூடி என்போக்கில் சென்றுவிட்டேன்

கண்டித்தாய் ஆயினும் மீறிவிட்டேன்

தடுமாறித் தலைகீழே வீழ்ந்துவிட்டேன்

“தான்” என்ற அகந்தையால் அழிந்துவிட்டேன் Continue reading

Bhakti Song 566 – மண்டியிட்டேன்

உன்னிடம் உண்மையாய் இல்லாமலே

ஊருக்காய் நடித்தால் ஏமாந்திடுவேன்

உன்னிடம் சொன்னதை செய்யாவிட்டால்

என்னைநானே ஏமாற்றிக்கொள்வேன்

 

காலாலே கல்லை உதைத்தபின்னே

புலம்பியே பயனேது வீணில்தானே

தலையாலே பாறையில் மோதிக்கொண்டு

Continue reading

Bhakti Song 565 – ஆடிய ஆட்டம் என்ன

போட்டது கொஞ்சமா ஆட்டமும் நான்

பொழுதெல்லாம் ஆடினேன் தாண்டவம் தான்

இச்சை-கோபத்தை ஆடையாக்கி

மோகத்தை அணியாக கழுத்தில் பூட்டி

காம-லோப சதங்கைக் கட்டி

அவை தந்த இசைக்கேற்ப ஆட்டமாடி Continue reading