Evasive Response Song

After writing my article on Evasive Response, I wrote this song:

 

வெகுசிலர்

 

தத்தளிக்கும் போதிலே

தண்ணீரில் குதித்து

தன்னுயிரைப் பணயம்வைத்து

தரைசேர்ப்பார் ஒருசிலர்

 

தரைமீது நின்று

தத்துவம் பேசி

நீந்திக் கரைசேர

வழிசொல்வார் ஒருசிலர்

 

உடலாலும் மனதாலும்

உடன்வந்து உலகில்

உதவிபல செய்து

உயர்த்துவார் ஒருசிலர்

 

கொள்கை பலபேசி

கோட்டிட்டு காட்டி

கூறிடுவார் சிலர்

நல்ல உபதேசம்

 

இருவரின் சேவையும்

நிச்சயம் தேவை

இடம்பொருள் அறிந்து

உதவிடும் போது

 

ஒருவரைப் பற்றாமல்

மற்றவரை ஒதுக்காமல்

தன்தேவை அறிந்து

வாழ்வோர் வெகுசிலர்

 

31-7-15, மத்திகிரி, 11.00 இரவு

 

128 Very few

 

When we are drowning

Jumping in water

By risking one’s life

Few will help us to reach the shore

 

Standing on the shore

Talking philosophy

Some will give guidance

To swim and reach the shore

 

Accompanying in this world

With us both in body and mind

By doing many help

Some will uplift us

 

Talking many ideology

By quoting various things

Some will give

Good advice

 

The seva of both

Is essential

Understanding the time, place and need

When they help

 

Not clinging to one

And rejecting the other

Very few are there to live

Realizing their own need

 

31-7-15, Mathigiri, 11.00 pm