Bhakti Song 794

அளந்துவச்சான்

ஆட்டுக்கு வாலையும் அளந்துவச்சான்
அதுபோல் எந்நிலை புரியவச்சான்
இறுமாப்பான இதயம் வேண்டாம்
ஆணவம் கொண்ட பார்வைவேண்டாம்

தேவையற்ற செயல்களையும் என்
தலைமேல் இழுத்துப் போடாமல்
முடிஞ்சதை செய்ய தெரிஞ்சிக்கணும்
முடியா செயல்களை மறந்திடணும்

தனது எல்லையைத் தெரிஞ்சிக்கணும்
அதற்குள் ஆடப் பழகிக்கணும்
எல்லையைத் தாண்டிப் போகாதே
எடுத்தேன் கவிழ்த்தேன் என்காதே

வேண்டா செயல்களை செய்தாலே
வீணாய்ப் பாரமும் பெருகிவிடும்
இறுதியில் காரியம் கெட்டுவிடும்
எவருக்கும் பயனின்றி ஆகிவிடும்

உதவி என்று வரும்போது
உன்னால் முடிந்ததை செய்துவிட்டு
வீணாய் வாக்கும் கொடுக்காதே
வம்பில் போய்பின் மாட்டாதே

முடியா செயல்களில் தலையிட்டால்
முதலுக்கே மோசம் வந்துவிடும்
பிறருக்கும் தொல்லை ஆகிவிடும்
வீண்பேச்சாய் ஏச்சாய் மாறிவிடும்

மத்திகிரி, 5-1-18, மதியம், 2.10, சங். 131.1b

Bhakti Song 793

நன்றி சொன்னேன்

இந்த நாளிலும்
என்னோடு இருந்தாய்
என்னுடன் வாழ்ந்து
நன்மைகள் புரிந்தாய்
அதையெண்ணி நானும்
சன்னிதி வந்தேன்
இருகரம் கூப்பி
திருவடி பணிந்தேன்
உடலின் தேவைகள்
ஒவ்வொன்றாய்ப் பார்த்து
ஒருவித குறைவின்றி
நிறைவேற்றித் தந்தாய்
மனதின் தேவைகள்
எதுவெனப் பார்த்து
மனதார அவற்றை
அதிகமே தந்தாய்
வயதான காலம்
வந்ததினாலே
வசதிகள் பலவும்
செய்துமே தந்தாய்
வரம்பு மீறிநான்
ஏதும் செய்யாமல்
வயதுக்கு ஏற்றப
ஒய்வுமே தந்தாய்
காலத்தில் படுத்து
உறங்கி எழுந்து
கடமைகள் செய்ய
வலிமையையும் தந்தாய்
அதையெண்ணி மீண்டும்
திருவடி வந்தேன்
உறங்கும்முன் உனக்கு
நன்றியும் சொன்னேன்
மத்திகிரி, 4-1-2018, இரவு 11.50

Bhakti Song 792

பாரமில்லை

உனக்கென வாழ்வது
ஒருவிதம் பாரம்
உணர்ந்துதான் வந்தேன்
கிருபைத் தாரும்
தனக்கென வாழ்வதில்
எனக்கில்லை இலாபம்
உணர்ந்துமே கொண்டேன்
மாற்றமே தாரும்
இதயமும் விரும்புது
இதமான வாழ்வை
மனதோ நாடுது
பலவிதத் தேவை
தேகமும் தேடுது
தனெக்கென ஓய்வை
இவற்றோடு போராடி
அடைந்தேன் சோர்வை
இத்தோடு முடியலை
எனக்குள்ள போராட்டம்
உலகிலே உள்ளது
பலவித ஆட்டம்
ஊரோடு உலகோடு
உறவோடு வாழ்வதால்
ஒருபோதும் நிற்காது
நானோடும் ஓட்டம்
இதனிடை உனக்கென
வாழ்வதை அறியேன்
உனக்கென வாழ்வது
எதுவெனப் புரியேன்
அன்றாடம் நீதரும்
ஓட்டத்தை ஓடாமல்
ஐயனே உனக்கென
வாழ்வதை அறியேன்
இயல்பாக அன்றாட
பணிகளைச் செய்து
இடையிடை உன்னோடும்
உறவாடிக் கொண்டு
நீதரும் வாழ்வையும்
கொண்டாடிக் கொண்டு
வாழ்வதில் பாரம்
இல்லை உணர்ந்தேன்
மத்திகிரி, 4-1-2018, இரவு 11.00

Bhakti Song 791

தாளினைத் திறவாய்

தேடியே வந்தான்டி
தெருவிலே நின்றான்டி
வாசலில் வருவான்டி
வரவேற்கச் சொல்வான்டி
பெறஅவன் வரவில்லை
தரவேண்டி வந்தான்டி
பெற்றிட விரும்பினால்
தாளினைத் திறவேன்டி
உவப்புடன் வருவான்டி
உன்னுடன் இருப்பன்டி
உய்யும் வழிகாட்டி
உன்னையும் மீட்பான்டி
இவன்போல் ஒருவனை
இகத்தினில் கண்டாயோ
ஏனின்னும் தாமதம்
தாளினைத் திறவாயோ
தயங்கியே நிற்காதே
தாமதம் செய்யாதே
தாளினைத் திறந்தவன்
தாளினைப் பணிவாயே
உவப்புடன் ஏற்பான்டி
உன்வசப் படுவான்டி
உன்னுடன் வாழ்தவன்
கரையுமே சேரப்பான்டி
மத்திகிரி, 4-1-2018, 8.00

Bhakti Song 790

பாடும் பேரின்பம்

அதிகமே செய்தாய்
அதற்காக நன்றிறாய்
அனுதினம் நடதுறாய்
ஐயனே நன்றி
எதிலுமே குறைவில்லை
இதற்காக நன்றி
இன்னமும் அருளுவாய்
உளமாற நன்றி
கடமைகள் செய்திட
கரம்பிடிதுச் சென்றாய்
கலங்கிநான் தவிக்காமல்
அரணாக நின்றாய்
தயங்கிநான் நிற்கையில்
துணையாக வந்தாய்
கரம்குவித்தே பணிந்தேன்
ஏற்றுமே கொண்டாய்
உனைமுன் வைத்தே
ஓடிடச் செய்தாய்
உன்னுடன் ஓடியே
வென்றிடச் செய்தாய்
இனிவாழும் வாழ்வை
உனதாக்கிக் கொண்டாய்
இதையெண்ணி தொழுதேன்
எனையாண்டு கொண்டாய்
உனக்கென வாழ்வது
ஒருவித இன்பம்
உன்னுடன் வாழ்வது
அதனினும் இன்பம்
என்னுளேநீ வாழ்வது
உண்மையில் இன்பம்
இதைநான் பாடுதல்
என்றும் பேரின்பம்
மத்திகிரி, 4-1-2018, மதியம் 1.50

After returning from Bangalore yesterday, completing all my travel, meetings etc. suddenly I flet some kind of relaxation in my mind. When I look back on all my travels and various meetings I can do nothing but thank God the way took me along with him and accomplished what he wanted through me. After reading my regular portion from Muktiveda, when I was reflecting on the past two months of hectic travel and various programs I simply said to the Lord, ‘You have done more than what I expected and what I could accomplish on my own. But the way you went along with me and accomplished more than what I can do, I have nothing but to say thanks to you’. As the inspiration came I wrote this song as my thanksgiving.

Bhakti Song 789

நிலையாக வாழ்கிறேன்

நீதந்த வாழ்விது
நித்தமும் வாழ்கிறேன்
நிலையிலா உலகிலே
நிலையாக நிற்கிறேன்
உருண்டோடும் வாழ்விலே
உன்னருள் காண்கிறேன்
உளமாற உன்னடி
தின்தோறும் பணிகிறேன்
குறைவிலா நிறைஒன்று
உலகிலே எனக்கிலை
குற்றம் குறைவிலா
வாழ்வுமே காணலை
ஆயினும் நீவந்து
ஆட்கொண்ட பின்னிலே
அடிமைக்கு இவையெல்லாம்
குறைவாகத் தெரியலை
தகுதிநீ கண்டுமே
என்னையும் மீட்கலை
தயவுடன் தாங்கினாய்
என்குற்றம் பார்க்கலை
இவைகளை எண்ணினால்
என்பாரம் தாங்கலை
ஏறிட்டுப் பார்க்கவும்
எனக்குமே வழியிலை
பாவிநான் என்றுதான்
நானுமே வருகிறேன்
பரிதாபம் கொள்ளென
கெஞ்சியே நிற்கிறேன்
இதற்குமேல் சொல்லிட
மொழியின்றி தவிக்கின்றேன்
என்னநீ செய்யினும்
சம்மதம் என்கிறேன்
உன்நீதி போர்வையால்
என்னையும் மூடினாய்
ஏற்றுநீ கொண்டுமே
என்பாவம் போக்கினாய்
அதனாலே மீண்டுமே
புதுவாழ்வு காண்கிறேன்
அனுதினம் உன்னுளே
நிலையாக வாழ்கிறேன்
குருகுலம், 1.1.2018, காலை, 3.30

Bhakti Song 788

என்பழக்கம்

உன்னிடம் வருவது ஒருவிதம் நல்லது
உன்னிடம் சொல்வதே என்னக்குமே நல்லது
என்னை நானே சுமந்தே இளைத்தேன்
இதுபுரியாமல் வீணாகத் தவித்தேன்
எனக்குள்ள கவலைகள் ஏராளம் ஏராளம்
அவற்றை எண்ணி மருகினே நாளும்
தேடினேன் விடைகளை என்னக்குள் நானே
திகைத்துத்தான் போனேன் அவை காணாமல்
தீர்வுகள் ஆயிரம் தோன்றிய போதும்
தெளிவற்று இருந்தன விடைகள் தானும்
என்புத்தி சார்ந்தே எண்ணிதான் பார்த்தேன்
எனக்குள திறனை நம்பினேன் நானும்
துணைவலி தோள்வலி பலவந்த போதும்
தீர்வுதான் வரவில்லை அவைகளினாலும்
இறுதியில் என்மனம் உரைத்ததின் பின்னே
உன்னிடம் வந்தேன் அவைகளைச் சொல்ல
“வாராத கவலைக்கு வருந்தினாய் வீணே
வந்தாலும் தீரவில்லை உன்னிடம் தானே
பலமுறை இதைநீ அறிந்த பின்னும்
திருந்திடும் மனம்மட்டும் உனக்கில்லை இன்னும்”
இடித்து எடுத்து உரைத்தாய் நீயும்
இதுபோல் கூறினாய் பலமுறை தானும்
நான்னென்ன செய்ய இதுஎன் பழக்கம்
பொறுமை காப்பதும் உனக்குள்ள வழக்கம்
மத்திகிரி, 25-12-2017, காலை 2.15

Bhakti Song 787

உனக்குப் புரியும்

நினைக்க எனக்கு நேரமும் இல்லை
நிற்க எனக்கு போதுமே இல்லை
தேவைகள் தேடி ஓடிடும் போது
தெய்வமே உனக்கு நேரமே இல்லை
எழுந்ததும் இன்றைய நாளைய கவலை
அடுத்து வந்திடும் ஆயிரம் வேலை
ஆடி ஒடி முடிக்கும் முன்னே
வந்திடும் தன்போல் தூங்கிடும் வேளை
நேற்றைய தினம்போல் இன்றுமே போச்சு
நாளைய கவலை கூட வந்தாச்சு
அதற்கென ஆயத்தம் செய்திடும் போது
உனக்கென நேரம் எனக்குமே ஏது
இதுவே வாழ்வு என்றான பின்னே
இதைப்பற்றி பேசி பயனுமே என்ன?
ஆயினும் இதற்கு யார் பொறுப்பாவது
அதற்கு மட்டும் பதில்நீ கூறு
சும்மா இருந்த சங்கையும் எடுத்து
ஊதி கெடுத்தது யாரெனச் சொல்லு
அதற்கு பதிலை நீ தரும் போது
புரியும் உனக்கு என்நிலை அப்போது
மத்திகிரி, 24-12-2017, மதியம் 2.45

Karma and Gospel

Question: Has Muktinath ended the karmic cycle and exchanged our bad karmas with His Good Karma (imputed Righteousness is in my mind and the substitutionary Sacrifice or bali or yajna of Muktinath)?

One time while I was sharing the gospel with my father, after listening carefully he said, “If another person can die for my sins so that I need no more to face the consequences of my karma, this seems very odd. I have to pay for my karmas and nobody else can bear the fruits of my karma.  If this is so then you all have made salvation very cheap.”

In my response I never mentioned sin but said that Bhagavan Muktinath took all my past karmas (Sanchita karmas) and the fruits of my good karmas (kriyamani karma) goes to him as I do everything offering to him (Nishkamya karma—offering everything to god Gita 2:47). In the case of any bad karma that I do, if I honestly confess to him, he is capable of removing them to forgive me. Therefore karma has no more binding on me.

After listening to this response my father kept quiet and didn’t say anything.

But karma is a complicated subject and it is not very easy to handle as related to Muktiveda. At the same time we should understand that Muktinveda also talks a lot about karma.  I often say that faith is nothing but a kind of karma waiting patiently to receive the grace of God every time in our lives.

Though we can say that the karmic effect as samsara (karmic cycle) has ended for me, it is a bit theologically complicated to claim that Muktinath has exchanged his good karma (imputed righteousness) because he need not earn any good karma to exchange it with our bad karma.  Here comes the problem of relating one (religious) worldview with another one which stands poles apart theologically.

Similarly the substitutionary sacrifice also has various interpretations about which Dr. Hoefer has written one excellent paper which you should read to know all about the later developments in the course of theological development in the early era of church history.  According to him:

The Orthodox theological tradition has an entirely different approach to the concept of salvation. They do not emphasize the crucifixion, but the Incarnation and the Resurrection. I find that tradition much more insightful and refining. I think it makes much more sense in a context of Hindu sensibilities. I’ve attached an article I wrote some years ago (published in Missiology, Oct. 2005, pp. 435-50).  It describes the origin of the Western tradition of sacrificial atonement and critiques its limits.

Bhakti Song 786

பணிந்திடுவாய்

இனிய காலை போதினிலே
இயற்கையும் துதிக்கும் வேளையிலே
இதயமே நீயும் நினைந்திடுவாய்
இறைவனைப் போற்றி பணிந்திடுவாய்
சென்ற நாட்கள் அனைத்திலுமே
செய்தான் பலப்பல நன்மைகளை
அவைகளை நீயும் நினைந்திடுவாய்
ஐயனைப் போற்றித் துதித்திடுவாய்
உடலோடுடு மனதின் தேவைகளை
உணர்ந்தே அவற்றை நிறைவேற்றி
உற்றம் சுற்றம் உறவுடனே
உன்னை வைத்தான் நினைந்திடுவாய்
கண்ணின் மணிபோல் காத்திருந்தான்6
கவலைகள் குறைகளைப் போக்கிவைத்தான்
எதிர்காலம் எண்ணி ஏங்காமல்
ஏந்தியே கரங்களில் தாங்கிவந்தான்
இவைகளை எண்ணி துதிசெய்வாய்
இன்றும் நடத்துவான் பணிந்திடுவாய்
இதற்கென இந்தநாள் தந்தான்
இதனை எண்ணி மகிழ்ந்திடுவாய்
மத்திகிரி, 24-12-2017, காலை, 6.15