Song 557

புதுப்பாடல்

புதுப்பாடல் ஒன்று
தினம்தர வேண்டும்
தெவிட்டாமல் நானும்
உனைப்பாட வேண்டும்

உனைப்பாடும் போது
உவப்பாய் இருக்குது
உன்புகழ் கூற
மகிழ்வாய் இருக்குது

மனதார உன்னைத்
தினம்பாட வேண்டும்
மெளனமாய் உன்னை
நான்போற்ற வேண்டும்

இதற்குநீ இரங்கி
வரம்தர வேண்டும்
வேறொன்று கேட்கா
மனம்தர வேண்டும்

பக்தியால் உந்தன்
பதம்பணி வேனே
பாடல் புனைந்து
தினம்தொழுவேனே

அந்த ஆனந்தம்
மேலிட நானும்
ஐயனே உன்னிலே
நிலைத்திருப்பேனே

மத்திகிரி, மதியம். 2.10, 24-10-16