Song 558

உரிமையும் இருக்கு

உன்னிடம் வரவே உறவும் இருக்கு
உன்னிடம் கேட்க உரிமையும் இருக்கு
கேட்பதைத் தரவே அருளும் இருக்கு
கேட்க எனக்கென்ன தயக்கமும் இருக்கு

கேட்கவும் சொன்னாய் தயக்கமில்லாமல்
கேட்கிறேன் அதனால் வெட்கமில்லாமல்
உள்ளதைச் சொன்னேன் தயக்கமில்லாமல்
உதவிடச் சொன்னேன் வெட்கமில்லாமல்

எத்தனை குழப்பங்கள் தேவை இல்லாமல்
எவ்விதம் மீள்வேன் சேதமில்லாமல்
அதையும் சொல்லிட வந்திடும் போது
எவ்விதத் தயக்கமும் எதற்கு எனக்கு

என்னைப் போலவே வந்ததினாலே
என்நிலை நீயும் அறிந்ததினாலே
உன்தன்மையினாலே அதை வென்றதினாலே
உன்னிடம் சொன்னேன் உரிமையினாலே

நல்லவேளை இந்த உறவைத் தந்தாய்
நானுய்ய எனக்கு உரிமை தந்தாய்
அதையும் அறிய பக்தியைத் தந்தாய்
அதற்கும் மேலே உன்னையே தந்தாய்

அந்த உரிமையால் அடியனும் வந்தேன்
அருள்வாய் என்று தினமும் வேண்டினேன்
அதைச் சொல்லவும் உறவை நாடினேன்
அந்த உரிமையைத் தினம் கொண்டாடினேன்

மத்திகிரி, 24-10-16, மதியம் 2.50