Song 560

வேறென்ன சொல்ல

எப்படி நீயும் என்னையும் ஏற்றாய்
எதற்காய் நீயும் என்னையும் மீட்டாய்
உலகில் உருவாகி வந்தது முதலே
உழன்றேன் வாழ்ந்தேன் பாவத்தில் நானே

ஆயினும் உனது மேன்மையைக் காட்ட
அத்துடன் பிறருக்கு நம்பிக்கை ஊட்ட
என்னைத் தேடி நீயுமே மீட்ட
உன்னைத் துதித்துத் தூயவர் போற்ற

விண்ணும் மண்ணும் வியந்து கொண்டாட
நல்லவர் தூயவர் வந்து பாராட்ட
நாயனைக் கூட உன்னடி சேர்த்த
உன்னைப் போற்றி நானும் உயர்த்த

வந்தேன் இன்று சன்னதி முன்னே
வள்ளலே உந்தன் கருணையே என்னே
ஒடுங்கி ஒளிந்து வாழ்ந்த எனக்கு
வேறோரு புகலிடம் இனியும் எதற்கு

மீட்டவன் நீயே என்பதைக் காட்ட
என்னையும் மீட்ட உன்னைப் போற்ற
வாயும் குழன்று வார்த்தைகள் இன்றி
வந்தேன் வறியவன் வேறென்ன சொல்ல

மத்திகிரி, மதியம் 27-10-16, மதியம், 2.30 ஶுர் தஸ் ஸொன்க் ௩௯௭, ப். ௬௮௯