Song 566

மண்டியிட்டேன்

உன்னிடம் உண்மையாய் இல்லாமலே
ஊருக்காய் நடித்தால் ஏமாந்திடுவேன்
உன்னிடம் சொன்னதைச் செய்யாவிட்டால்
என்னைநானே ஏமாற்றிக்கொள்வேன்

காலாலே கல்லை உதைத்தபின்னே
புலம்பியே பயனேது வீணில்தானே
தலையாலே பாறையில் மோதிக்கொண்டு
கலங்கியே பயனேது பின்புதானே

பணிந்தே உன்னிடம் வந்துவிட்டால்
பரிதாபம் கொண்டு காப்பாய் நீயே
அகம்பாவம் கொண்டு நான் வாதிட
அகப்பட்டேன் நான்சொன்ன வார்த்தையாலே

உன்நீதி தன்னையே அறிந்த பின்னும்
உன்னபைச் துச்சமாய் எண்ணிவிட்டால்
உய்ந்திடும் வழியோ உலகில் இல்லை
உன்சீற்றம் தாங்குவோர் எவருமில்லை

எரிக்கும் நெருப்பு என்றுணர்ந்து
எச்சரிக்கும் போது தாழ்மை கொண்டு
மன்னிப்பாய் மன்னிப்பாய் எனவேண்டி
மனம் மொழி மெய்யாலே மண்டியிட்டேன்

மத்திகிரி 7-11-16, இரவு 11.05