Song 572

கரைசேர்ந்தேன்

கையேந்தி வந்து கேட்க உன்னிடம்
கூசியே நிற்பார் தகுதி யற்றோர்
எல்லாம் இழந்து ஏழையாய் ஆயினும்
ஏனோ உன்னிடம் வந்திட மறுப்பார்
நீரில் அடித்துச் செல்வோரும் கூட
உடைந்த கிளையைப் பற்றிக்கொள்வார்
வேர்கொண்ட மரத்தின் வேரும் கிடைத்தால்
நிச்சயம் பிடித்துக் கரையும் சேர்வார்
உனது அருளின் கிளையும் தடுக்க
உன்னிரக்கம் பற்றிக் கரையும் வந்தேன்
களைத்து இளைத்துப் போன எனக்கு
மரத்தின் கனியால் உயிரும் தந்தாய்
இழந்த வாழ்வைத் தந்த உன்னை
என்றும் போற்றிப் பாடி பணிவேன்
ஏளனம் செய்வோர் பேச்சை ஒதுக்கி
என்றுமே உன்னடி பற்றியே நிற்பேன்
நம்பிக்கையோடு வந்திட்ட எனக்கு
என்ன குறையும் இனியும் உண்டு
உன்னருள் என்னும் கிளையைப் பற்ற
கரைசேரத் தடை ஏதினி உண்டு

மத்திகிரி, 11-11-16, மதியம் 2.10,
Sur 407, pp. 706-07