Song 577

கருணை காட்டு

வேறு எங்கேயும் கிடைக்கவில்லை
வேறு எவருமே மீட்கவில்லை
ஆகையால் தேடியே வந்துமீட்ட
உன்னைவிட்டு நான் வேறெங்கு செல்வேன்
கானல்நீர்பின் ஓடிய மானைப் போலேவே
மாயையின் பின்னாக ஓடியே சென்றேன்
கரையேறும் வழியை நீ காட்டவேவந்தும்
நுரைமீது மிதந்து நீரில் நான் சென்றேன்
மரணத்தை மீற நீ வழியொன்று திறந்தும்
மெளனமாய் அதன்வழி மீண்டுமே சென்றேன்
வழியல்லா வழியினில் ஓடியேசென்றேன்
வாடியே இறுதியில் சோர்ந்துமே நின்றேன்
அச்சாணி இழந்த வண்டியைப் போலே
பாதியில் குடைசாயக் கவிழ்ந்துமே நின்றேன்
குரங்காட்டி கையிலே மாட்டிக் கொண்டுமே
குட்டிக் கரணங்கள் பல போட்டுமே வாழ்ந்தேன்
மதம்கொண்ட யானைபோல் மதியினை யிழந்து
மதிகெட்டுப் பலவழி திரிந்துமே வாழ்ந்தேன்
பார்வை குறைந்த ஆந்தையைப் போலே
இருளிலே இரைதேடி வாழ்வினைக் கழித்தேன்
பாவிக்கு இரங்கியே மீட்பவனே உன்
பரிதாபம் ஒருமுறை மீண்டுமே காட்டி
நாற்றத்தைச் சுமந்தே நாளும் வாழ்ந்திடும்
நாயேனை மீட்டிடக் கருணையைக் காட்டிடு

மத்திகிரி, 17-11-16, மதியம், 2.00, Sur, song 411, p. 712-13