Song 582

இறைவனின் வார்த்தை

இரைத்து நிதமும் பாய்க்காவிட்டால்
நிலையான நீரும் நாறிவிடும்
நித்தமும் உன்வார்த்தை கேட்காவிட்டால்
நெஞ்சமும் கல்லாய்த்தான் மாறிவிடும்

தேங்கிய நீரும் வற்றிவிடும்
நீரின் வரவு இல்லையென்றால்
மனமும் நிச்சயம் சோர்ந்துவிடும்
இறைவன் அருளும் இல்லையென்றால்

ஜீவ நீரிடம் வந்திடுவீர்
தாகம் நீங்கிடப் பருகிடுவீர்
ஜீவனோடு தினம் வாழவேண்டின்
இறைவனின் திருவடி பற்றிடுவீர்

சொந்த புத்தியைச் சார்ந்திருந்து
சிலபல வாதங்கள் செய்திருந்து
அறிவின் மேன்மையை வெளிக்காட்ட
ஆயிரம் தர்க்கங்கள் செய்திடலாம்

ஆயினும் உள்ளம் தெளிவடைய
அதனுள் அன்பு பெருகியோட
அடுத்தவர் நலமெண்ணி வாழ்ந்திருக்க
அண்டுவீர் அவனடி மனம்சிறக்க

மத்திகிரி, 21-11-16 2.10 pm.