Song 583

உன்புகழ் பாட

நீ வந்து பேசிடும் போது
நெஞ்சமும் மகிழ்ச்சியில் நிரையுது
நான் அதைக் கேட்டிடும் போது
நினைவெலாம் அருளாலே நிரையுது

உந்தன் வார்த்தையைக் கேட்க
உள்ளமும் உவகை கொள்ளுது
உள்ளாக நீவந்து பேச
உணர்ச்சியால் மனமுமே துள்ளுது

இரைச்சல்கள் ஆயிரம் வந்து
எரிச்சலை மனதிலே தந்து
உன்னிடம் வருவதைத் தடுத்து
மனதைப் பலவிதம் மயக்குது

ஆயினும் அவற்றின் ஊடே
அமைதியாக நீவந்து பேச
சோர்வுற்ற ஆன்மாவும் துளிர்க்க
சிந்தையும் மீண்டுமே உயிர்க்க

வறண்ட நிலத்தின் மீது
விழுந்திடும் மழையைப் போல
ஆவலாய் நான் அள்ளிப்பருக
அதனால் தாகமும் தணிய

மீண்டும் உன்னையும் துதிக்க
மேனியும் அத்துடன் சிலிர்க்க
ஆனந்தம் மேலிடப் போற்ற
வந்தேனே உன்புகழ் பாட

மத்திகிரி, 24-11-16, மதியம் 2.10