Tamil Song 153

அவர் அவர் பங்கு

 

ஆயிரம் கவலைகள்

அனுதினம் பாடுகள்

அணிவகுத்து வந்தால்

வாழ்வதும் எவ்விதம்

 

உடல்தேவை ஒருபுறம்

உளத்தேவை மறுபுறம்

இவற்றின் இடையே

பிறர்தேவை குறுக்கிடும்

 

தனக்கென வாழ்வதும்

தரணியில் முடியாது

தனித்தே வாழ்வதும்

எவராலும் இயலாது

 

தன்தேவைக் காகவே

பிறருக்கு உழைக்கனும்

தான்வாழ எண்ணினால்

பிறருடன் உழைக்கனும்

 

பிறருக்கு உழைத்திட

தன்தேவை நிறைவுறும்

பிறருடன் வாழ்ந்திட

தன்வாழ்வும் நிறைந்திடும்

 

ஆயினும் இதுவொன்றும்

எளிதான தல்ல

அங்குதான் தொடங்கும்

போராட்டம் மெல்ல

 

எப்படி முயன்றாலும்

தப்பிக்க முடியாது

எங்கு போயினும்

போராட்டம் ஓயாது

 

முடிந்ததைச் செய்ய

முயற்சி பண்ணனும்

முடியா தென்பதை

முற்றிலும் தவிர்க்கனும்

 

அவரவர் பங்கை

அவரவர் செய்ய

அன்றாட வாழ்வும்

நன்றாக முடியும்

 

இதை உணராது

இடையூறு செய்தால்

அனைவர் வாழ்வும்

கவலையில் முடியும்

 

மத்திகிரி, 21-3-16, இரவு, 11.30