Tamil Song 154

எவருக்கும் புரியாது

 

வலியும் வேதனையும் வந்தால்தான் புரியும்

வாழ்வின் பாரமும் சுமந்தால்தான் தெரியும்

நாம்படும் துயரம் பிறர்க்கு புரியாது

புரிய வைக்க நம்மாலும் முடியாது

 

எத்தனை மனிதர் துணைக்கிருந் தாலும்

எவ்விதம் தாங்கி சுமந்திருந் தாலும்

நம்போராட்டம் நமக்குத்தான் புரியும்

நாமதைக் கூற (பல) கேள்விதான் பிறக்கும்

 

அறிவுரை ஆயிரம் பலர்வந்து கூறுவார்

ஆலோசனபல இலவசமாய்த் தருவார்

அவர்தரும் இவற்றிலே தவறேதும் இல்லை

ஆயினும் அவற்றாலே பயனேதும் இல்லை

 

பிறர்தரும் அறிவுரை கேட்டிட வேண்டும்

பிறருடன் கூடி வாதிக்க வேண்டும்

இறுதியில் காரியம் வருகின்ற போது

சரியெனப் படுவதை செய்திட வேண்டும்

 

இறுதி பலன் எதுவாக இருந்தும்

ஏற்று அதன்படி சென்றிட வேண்டும்

அனுபவம் தந்த படிப்பினைக் கொண்டு

தவறுகள் திருத்தி வாழ்ந்திட வேண்டும்

 

27/28-3-16, இரவு, 12.30, மத்திகிரி