Tamil Song 206 – இயலாமை

அலுப்பும் சலிப்பும் அனைவர்க்கும் வந்திடும்

கோபமும் எரிச்சலும் கூடவே இருந்திடும்

இயலாமை, தள்ளாமை என்றான பின்னே

இவை அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்

 

ஓடிய வாழ்வின் ஓட்டமும் நின்றபின்

ஒருவித அயர்ச்சி தன்னாலே வந்திடும்

ஆர்வமுடன் செய்த அனைத்து செயல்களும்

அலுப்புடன் சலிப்பாலே தன்னாலே குறையும்

 

தன்தேவை பிறர்தேவை தலைமேலே போட்டு

தன்னாலே முடியுமெனெ திடமனம் கொண்டு

ஓடி உழைத்து ஓய்ந்த பின்னாலே

உடலோடு உள்ளமும் சோர்ந்துதான் போகும்

 

காலத்தின் கோலத்தை ஏற்கத்தான் வேண்டும்

கலங்கியே பயனில்லை புரிந்திட வேண்டும்

ஓடும்வரை ஓடட்டும் என்றுதிடம் கொண்டு

இயன்ற செய்லசெய்து வாழத்தான் வேண்டும்

 

உழைக்கத்தான் பிறந்தான் உலகிலே மனிதனும்

ஓடித்தான் பார்க்கிறான் முடிந்தவரை அவனும்

இலக்கு எதுவென என்றுமே தெரியாமல்

இறுதிவரை அதைநோக்கி ஓடத்தான் வேண்டும்

 

அலுத்தாலும், சலித்தாலும் மாற்றேதும் இல்லை

அழுதாலும் புரண்டாலும் வழியேதும் இல்லை

வருவதை ஏற்று வாழவே பழகினால்

இயலாமை, தள்ளாமை தன்னாலே போகும்

 

28-7-16, மத்திகிரி, காலை, 11.00